பருத்தித்துறைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தொண்டைமானாறு தெற்கு ஜே-383 கிராம சேவையாளர் பிரிவு, ஜே-385 கெருடாவில் தெற்கு கிராம சேவையாளர் பிரிவு, ஜே-386 கெருடாவில் வடக்குக் கிராம சேவையாளர் பிரிவு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மொத்தமாக 130 ஆயிரம் ரூபா பெறுமதியான சத்துணவுப் பொருட்கள் புதன்கிழமை (25.02.2026) காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன.
சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினர் சத்துணவுப் பொருட்களை நேரடியாகக் கையளித்தனர்.