எதிர்வரும் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்குச் சலுகைகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பில் தமது சங்கம் பங்கேற்குமா என்பது தொடர்பான இறுதி முடிவை நாளை மறுதினம் அறிவிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான சலுகைகள் எதிர்வரும் ஆண்டின் வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 30ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த பணிப்புறக்கணிப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்துகொள்ளுமா என்பது தொடர்பில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான இறுதி நிலைப்பாடு நாளை மறுதினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.