“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதல்வரே? மாணவர்களின் கல்வி மீது கொண்ட ஆர்வத்தால் நீங்கள் இந்த சந்திப்பை நிகழ்த்தவில்லை” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதை விட, விளம்பரப் படங்களில் நடிப்பதிலேயே அதிக நேரம் செலவிட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று புதிதாக ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வெளியிட்டிருக்கிறார்.
முதல்வர் எத்தனை விளம்பரப் படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொள்ளட்டும். அதற்காக மக்களின் வரிப்பணத்தைக் கூட வீணடித்துக் கொள்ளட்டும். அதையும் கூட பொறுத்துக் கொள்வோம். ஆனால், முதல்வரின் சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமை இருக்கிறதா என்பது தான் நமது வினா.
“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படி படிப்பார்கள் முதல்வரே?” - அன்புமணி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space