“விஜய் குறித்த என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வேறு சித்தாந்தம். அவர்கள் வேறு சித்தாந்தம். இருப்பினும் அரசியல் கூட்டணிக்குள் முரண்பாடான கட்சிகள் உண்டு. பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்ந்தது உண்டு. தமிழகத்தில் திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், “கரூர் விவகாரத்தில் மடியில் கனமிருப்பதால் செந்தில் பாலாஜி சிபிஐ விசாரணைக்கு பதறுகிறார்” என்று அவர் கூறினார்.
அவர் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் கூறியது: “விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவத்துக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புகார் தெரிவித்த உடனேயே, போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமி உயிரிழப்பை தடுத்திருக்கலாம். இது காவல் துறையின் தோல்வி என்பதை விட, அத்துறையை நிர்வகிக்கும் முதல்வரின் முழு தோல்வியாகும். முதல்வர் வெட்கி தலை குனிய வேண்டும். ஆட்சியாளராக தோல்வியுற்றேன் என்பதை முதல்வர் ஒப்புக் கொள்ள வேண்டும்.
கேன் எடுத்துச் சென்று பெட்ரோல் பிடித்த நிலை தமிழ்நாட்டை தவிர, நாட்டில் வேறு எங்கேயும் நடக்கவில்லை. அதற்கு இங்குள்ள அரசியல்வாதிகள் பீதியை கிளப்பி விட்டதால், மக்களுக்கு பயம் வந்ததே காரணம். இந்த விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என பிரதமரே தெளிவுபடுத்திவிட்டார்.
“எங்கள் சித்தாந்தங்கள் வெவ்வேறானவை, ஆனால்...” - தவெக தலைவர் விஜய் குறித்து அண்ணாமலை விவரிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space