ஐரோப்​பிய நாடான இத்​தாலி​யில் பிரதமர் ஜார்​ஜியோ மெலோனி தலை​மையி​லான அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது.

அந்த நாட்​டில் 5.88 கோடி மக்​கள் வசிக்​கின்​றனர். இதில் 74.5% பேர் கத்​தோலிக்க கிறிஸ்தவ மதத்​தைப் பின்​பற்​றுகின்​றனர். 15.3% பேருக்கு கட​வுள் நம்​பிக்கை இல்லை. இதர கிறிஸ்தவ பிரிவு​களை சேர்ந்த 4.1 சதவீதம் பேர், முஸ்​லிம்​கள் 3.7% பேர், இதர மதங்​களை சேர்ந்த 2.2% பேர் வசிக்​கின்​றனர்.

கடந்த செப்​டம்​பரில் பிரதமர் மெலோனி கூறும்​போது, “பள்​ளி​களில் புர்கா, நிகாப் அணிவதற்கு தடை விதிக்​கப்​படும். இது பாது​காப்பு தொடர்​பான நட​வடிக்கை ஆகும். ஒரு பெண் அல்​லது ஒரு சிறுமி முகத்தை மறைக்க கட்​டாயப்​படுத்​து​வது அவரது அடிப்​படை உரிமை​களை மீறும் செயல்” என்றார்.

இதைத் தொடர்ந்து பள்​ளி​களில் புர்கா, நிகாப் அணிய தடை விதிக்​கும் சட்​ட மசோதா இத்​தாலி நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்றப்​பட்​டுள்ளது.

புதிய சட்​டத்​தின்​படி இத்​தாலி பள்​ளி​களில் புர்கா, நிகாப் அணிவதற்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. தடையை மீறினால் 1,000 யூரோக்​கள் வரை (ரூ.1 லட்​சம்) அபராதம் விதிக்​கப்​படும். புதிய நடைமுறை வரும் 2027-28-ம் கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது.