இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்று முன்தினம் இந்த சந்திப்பின்போது வடக்கு, கிழக்கில் இந்திய முதலீடுகளை முன்னெடுப்பது பற்றி ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் சம்பந்தமாகவும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.