இனங்களுக்கிடையில் குராேதத்தை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைத்தலத்தில் கருத்து தெரிவித்த, பஸால் என்ற நபருக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்த நாட்டில் இருக்கும் முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். அதேநேரம்  அவரின் கருத்தை முஸ்லிம் சமூகம் வன்மையாக கண்டிக்கிறது என பிரதி அமைச்சர்  முனீர் முழப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (28) சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

அண்மையில் பஸால் என்ற நபர் சமூகவைலத்தலத்தில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் முஸ்லிம்  சமூகத்தில் யாரும் அவரது கருத்துக்கும் ஆதரவளிக்கவில்லை.  ஆனால் முஸ்லிம் சமூகத்தைச்  சேர்ந்தவர்கள் தங்களுக்கு முடிந்தவகையிலும் தனிப்பட்ட  ரீதியில் சமூகவலைத்தலத்துக்கு வந்தும், அந்த நபரின் கருத்தை  வன்மையாக கண்டித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

எங்கள் அனைவருக்கும் தேவையாக இருப்பது, வைராக்கியம் குராேதத்துடன் உள்ள நாடு அல்லாமல், அன்பாகவும் ஒற்றுமையாகவும் இணைந்து பயணிக்க வேண்டிய நாடாகும்.

இந்த நாடு அதிகமான பெளத்தர்கள் இருப்பதுபோன்று ஏனைய இன கலாசாரங்களுடன் மிகவும் சிநேகபூர்வமாக பயணிக்கக்கூடிய நாடொன்றே எனைவருக்கும் தேவையாக இருக்கிறது. அதனால் எந்த சந்தர்ப்பத்திலும் குறித்த நபரின் கருத்தை, மனசாட்சி உள்ள, நல்லமுறையில் சிந்திக்கக்கூடிய, நாட்டை நேசிக்கின்ற எந்த ஒரு முஸ்லிம் இனத்தவரும்  அனுமதிப்பதில்லை.

அதனால்  இனங்களுக்கிடையில் குராேதத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த, குறித்த நபருக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்த நாட்டில் இருக்கும் முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். அதேநேரம்  குறித்த சர்ச்சைக்குரிய அறிவிப்பை மேற்கொண்ட நபர், 2024 பொதுத் தேர்தலுக்கு எந்த சுயாதீன குழுவில் கொழும்பு மாவட்டத்தில் 14ஆம் இலக்கத்தில் போட்டியிட்டார் என்பதை தேடிப்பார்க்குமாறு, இதுதொடர்பில் அரசாங்கத்தின் பக்கம் விரல் நீட்டுபவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரம் இனவாதத்தை தூண்டும் பஸால் போன்று யாரக இருந்தாலும். எந்த சமுகத்தை சார்ந்தவராக இருந்தாலும் இன மத பேதமின்றி அரசாங்கம் என்ற வகையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றார்.