பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு   அமைச்சு மற்றும் பாராளுமன்ற விவகார  அமைச்சு  ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதம் நேற்று (28) சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளை நிறைவேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னையின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பைக்  கோரினார்.

இதனை அடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில்  பாதுகாப்பு அமைச்சு,   நிதி ஒதுக்கீடுகளை அங்கீகரிப்பதற்கு ஆதரவாக 85  வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 81 மேலதிக வாக்குகளினால் அங்கீகாரமளிக்கப்பட்டது.

இதில் அரசாங்க தரப்பினர் ஆதரவாக வாக்களித்த நிலையில் எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாய கத்தமிழ் தேசியக்கூட்டணி , இலங்கை தமிழரசுக்கட்சி ஆகியன வாக்களித்த நிலையில் ஏனைய எதிர்க்கட்சிகளான பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன , புதிய ஜனநாயக முன்னணி , ஐக்கியதேசியக்கட்சி,சர்வஜன அதிகாரம் கட்சி,தொழில்கட்சி,அர்ச்சுனா இராமநாதன்  எம்.பி. தலைமையிலான் சுயேட்சைக்குழு 17 ஆகிய காட்சிகள்  வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.