பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (74), ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த ஜனவரி முதல் வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,கண் மருத்துவ நிபுணரின் பரிந்துரைப்படி, நவம்பர் 10 மற்றும் 11-ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை நிறுவனத்துக்கு இம்ரான் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கண் பார்வை மேம்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.