ஜென்சென் ஹுவாங், ஆலிஸ் ஹுவாங் இடையிலான ரகசிய உறவைப் பயன்​படுத்தி என்விடியா நிறுவனத்​திட​மிருந்து ரூ.70 ஆயிரம் கோடி மதிப்​பிலான சிப்​களை சீனா வாங்​கிய​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கான சிப்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக அமெரிக்காவின் என்விடியா உள்ளது.

இந்நிலையில், கடந்த அக்​டோபர் மாதம் அமெரிக்​கா​வின் முன்னணி செய்தி நிறு​வனம் வெளி​யிட்ட ஒரு செய்​தி​யில், என்​விடி​யா​வின் தலை​மைச் செயல் அதி​காரி ஜென்​சென் ஹுவாங்குக்​கும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்​ணுக்​கும் இடையே ரகசிய உறவு இருப்​ப​தாக தகவல் வெளி​யானது. இந்நிலை​யில், ஆலிஸ் ஹுவாங்​குடன் தனக்கு இருந்த ரகசிய உறவை ஜென்​சென் ஹுவாங் இப்​போது வெளிப்​படை​யாக ஒப்புக்கொண்​டுள்​ளார்.

இதற்​காக தனது மனைவி லோரி ஹுவாங் மற்​றும் குழந்தைகளிடமும் அவர் மன்​னிப்பு கேட்​டுள்​ளார். கடந்த 8-ம் தேதி தனது நிறுவன ஊழியர்​களுக்கு அனுப்​பிய மின்​னஞ்​சலில், ‘எனது செயல் என் மனைவி மற்​றும் குழந்​தைகளை புண்​படுத்தி இருக்​கும். இதற்​காக மிக​வும் வருந்​துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளி என்​பதும் சிங்​கப்​பூரை தலைமையிட​மாகக் கொண்ட மெகாஸ்​பீடு நிறு​வனம் மற்​றும் சீன பாது​காப்பு அமைச்​சகத்​துடன் அவர் இணைந்து செயல்​படுவதாக​வும் கூறப்​படு​கிறது. சீனா​வுக்கு சில சிப்​களை ஏற்​றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்​துள்ள நிலை​யில், மெகாஸ் பீடு நிறு​வனம் மூலம் என்​விடியா சிப்​கள் சீனா​வுக்கு சென்​றுள்​ளதா என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. குறிப்​பாக ஆலிஸ் சீன உளவாளியாக செயல்​பட்​டிருக்​கலாம் என்ற தகவல் வெளி​யாகி உள்​ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு விசா​ரணை மேற்​கொண்டு வருகிறது.

இந்​நிலை​யில், கடந்த 2 ஆண்​டு​களில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்​பிலான சிப்​களை என்​விடியா நிறு​வனத்​திடம் இருந்து சீன நிறு​வனங்​கள் பெற்றுள்​ள​தாக 'தி இன்ஃபர்​மேஷன்' செய்தி வெளியிட்​டுள்​ளது. குறிப்பாக, தடை செய்​யப்​பட்ட 2.4 லட்​சம் சிப்கள் (ஹெச்​100, ஹெச்​200) சீனா​வுக்கு கொண்​டு​செல்ல ஆலிஸ் உதவிய​தாகக் கூறப்​படு​கிறது. ஆலிஸ், தனது சகோ​தரி மற்​றும் கணவருடன் இணைந்​து, என்​விடியா சிப்​களைப் பெறு​வதற்​காக சீனா மற்​றும் சிங்​கப்​பூர் முழு​வதும் நிறு​வனங்​களின் வலையமைப்பை உரு​வாக்​கியதும் தெரிய​வந்​துள்​ளது.

குடும்​பத்​தினருக்கு தெரி​யும்?

தைவானில் உள்ள ஒரு உணவகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், ஜென்சென் மகள் மேடிசன் ஹுவாங், தனது தந்தை மற்றும் அலிஸைப் புகைப்படம் எடுப்பது பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில், ஜென்சென் அலிஸை அணைத்தபடி அவரது கன்னத்தில்

முத்தமிட முயல்வது பதிவாகி உள்ளது. அப்போது மேடிசனின் வருங்கால கணவரான நிக்கோ காப்ரேஸும் அவர்களுடன் அந்த உணவகத்தில் உடனிருந்தார் என தைவான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் ஆலிஸ் ஹுவாங்குடனான ஜென்சென் ஹுவாங் உறவு பற்றி அவரது குடும்பத்தினருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது.

ஆலிஸுடன் மேடிசன் ஹுவாங் பழகிய விதமும், அந்த ஜோடியைப் புகைப்படம் எடுத்த எளிமையையும் சுட்டிக்காட்டி, இந்த உறவு குடும்பத்தினருக்குள் தெரிந்த ரகசியம்தானா என்று சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.எக்ஸ் வலைதள பயனர் ஒருவர் வெளியிட்ட பதிவில், "எளிய முறையில் கூறுவதானால், இந்த விவகாரம் ஏற்கெனவே அரைகுறை ரகசியமாக இருந்தது. அவரது மனைவிக்கும் தெரிந்திருக்க வேண்டும். அமெரிக்க அரசு தனது பிடியில் வைத்திருப்பதால் இப்போது அந்த உறவை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஜென்சென் ஹுவாங்குக்கு ஏற்பட்டிருக்கலாம்" என கூறப்பட்டுள்ளது.