பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா பிரதேசத்தில் சட்டவிரோதமாக இரத்தினக் கற்கள் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று சனிக்கிழமை (7) காலை கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கள் 44, 64 வயதுடையவர்கள் என்பதுடன் இவர்கள் இருவரும் பொகவந்தலாவை பிரதேசத்தைச்  சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொகவந்தலாவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.