2026 ஆம் ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு, கனேடிய எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
செவ்வியல் மரபுடன் விளையாட்டுத்தனமான உரையாடலில் ஈடுபட்டு, சமகால இலக்கியத்திற்குப் புதிய வடிவங்களை உருவாக்கியுள்ள அவரது துணிச்சலான மற்றும் புதுமையான படைப்புகளுக்காக இந்த பரிசு அவருக்கு வழங்கப்படுகிறது.
76 வயதான ஆன் கார்சன், 1979 முதல் அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் செம்மொழி இலக்கியம், ஒப்பீட்டு இலக்கியம், படைப்பிலக்கிய எழுத்து துறையில் பணியாற்றுகிறார். 20க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ள கார்சன், ககன்கெய்ம் மற்றும் மெக்கார்தர் ஆய்வு நிதிகளைப் பெற்றுள்ளார்.

மேலும் லானன் இலக்கிய விருது, 2 கிரிப்பின் கவிதை பரிசுகள், டி. எஸ். எலியட் பரிசு, ஆசுதூரியாசு இளவரசி விருது, ஆங்கிலக் கவிதைக்கான கவர்னர் ஜெனரல் விருது மற்றும் பென்/நபோகோவ் விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.
கனேடிய இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2005 ஆம் ஆண்டில் கனடா ஆணையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.