சுவிட்சர்லாந்தில் பன்றிகளிடையே நோய்த்தொற்று ஒன்று பரவிவருவதால், பல்லாயிரக்கணக்கான பன்றிகள் கொல்லப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில், பன்றிகளிடையே நிமோனியா தொற்று ஒன்று பரவிவருகிறது. 

பன்றிகளிடையே பரவிவரும் அந்த தொற்று, Porcine enzootic pneumonia அல்லது மைக்கோப்ளாஸ்மல் நிமோனியா என அழைக்கப்படுகிறது. 10,500 கால்நடைகள் அழிப்பு

இந்நிலையில், இந்த தொற்று பரவலைத் தடுப்பதற்காக, ஆறு மாகாணங்களிலுள்ள 20 பண்ணைகளில் முழுமையாக கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

அவ்வகையில், நாடு முழுவதும் 10,500 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளான பண்ணைகளிலிருந்து வேறு இடங்களுக்கு பன்றிகளைக் கொண்டு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, லோசான் மாகாணம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டுமே 5,200 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, Bernஇல் 1,700 பன்றிகளும், வாட் மாகாணத்தில் 950 பன்றிகளும் கொல்லப்பட்டுள்ளன.

பாதிப்புக்குள்ளான 14 மாகாணங்களில் Neuchâtel மாகாணம், வாலே மாகாணம் ஆகிய மாகாணங்களும் அடங்கும்.