தேசிய கைவினை மன்றத்தின் ஏற்பாட்டில், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அழகியல் கற்கைகள் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட ‘இலங்கை கைவினை வாரம் – 2026’ சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு கொழும்பில் வியாழக்கிழமை (29) ஆரம்பமானது.

ஹெவ்லொக் சிட்டி மோல் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது, நேபாளத் தூதரக அதிகாரி விஜயகுமார் ரவுட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் மற்றும் கண்காட்சிப் பொருட்களைப் பார்வையிட்டன்