ஈரானில் இரண்டு ஜப்பானியர்கள் தடுத்து வைப்பு
Ad Space
Ad Space
ஈரானில் இரண்டு ஜப்பானியப் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை ஜப்பானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஜப்பானிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுக் கூட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) கலந்துகொண்டு உரையாற்றிய ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி இது குறித்த விபரங்களை வெளியிட்டார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவருடனும் ஜப்பான் தொடர்பில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சர் மொடேகி தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர், ஜப்பானின் அரச ஊடகம் தெஹ்ரான் பணியகத் தலைவர் என நம்பப்படுகிறது. அவர் கடந்த ஜனவரி மாதம் ஈரானிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஈரான் அரசாங்கத்திடம் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
Ad Space
Ad Space