உடல்நலக் குறைவால் சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
Ad Space
Ad Space
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவரை பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தற்போது அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் வைத்தியசாலைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space