சர்வதேச ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 5 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

யுனெஸ்கோ மற்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு  இணைந்து இந்நாள் 1994-ம் ஆண்டு முதல்  எடுக்கப்பட்ட முடிவின்படி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆசு என்றால் பிழை, இரியர் என்றால் திருத்துபவர். எனவே பிழைகளை திருத்தும் ஒரு மகத்தானவர்தான் ஆசிரியர் ஆவார்

ஆசிரியர்களின் உரிமைகள் மற்றும் தகுதிகள் குறித்து 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் திகதி யுனெஸ்கோ பரிந்துரைகளை  ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையிலேயே இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது

இவ்வருடம்  2026 ஆம் ஆண்டு  இப்பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

சர்வதேச ஆசிரியர் தினத்தினை கொண்டாடுவதற்காக, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச கல்வி அமைப்பு  ஒவ்வொரு ஆண்டும் ஒரு  தொனிப்பொருளை  முன்மொழிகின்றது.

ஆசிரியர்களைப் பற்றிய சிறந்த புரிதலையும், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் அவர்கள் வகிக்கும் பங்கையும் இதன்வாயிலாக  உலகிற்கு தெளிவுபடுத்துகிறது.

சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது

ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. 

உலகளவில்  சர்வதேச ஆசிரியர் தினம் அக்டோபர் 5 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற நிலையில் , இந்தியாவில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

 எனினும் , இலங்கையில் அக்டோபர் 6-ம் திகதியே  ஆசிரியர் தினத்தினை கொண்டாடுகிறது.