“கட்சித் தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, தவெக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது,” என அக்கட்சியின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிரமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நிர்வாகிகளால் ஏற்படும் பல்வேறு சர்ச்சைகளை தவிர்க்கும் விதமாக, தவெக தலைமை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்சித் தலைமை கட்டுப்பாடு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space