எத்திமலை - கொட்டியாகலை வனப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பாரியளவு கஞ்சா பயிரிடப்பட்ட பண்ணைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. மொனராகலை பிரதேச போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் எத்திமலை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் இணைந்து கடந்த 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே, அவை சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் எவருமற்ற நிலையில், 1 ½ ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 16,544 கஞ்சா செடிகளைக் கொண்ட ஒரு பண்ணையும், 03 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 38,785 கஞ்சா செடிகளைக் கொண்ட மற்றுமொரு பண்ணையும் கண்டறியப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக எத்திமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.