சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் ஒருவர் கைது !
Ad Space
Ad Space
கேகாலை - ருவன்வெல்ல பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருவன்வெல்ல பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை (26) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1010 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் ருவன்வெல்ல, அமிதிரிகல பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space