2027 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டாலும், கடுமையான பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, 2027 ஆம் ஆண்டில் ஏற்படவுள்ள சுமார் 900 மில்லியன் க டொலர் வெளிநாட்டு வளப் பற்றாக்குறையை ஈடுசெய்வது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் நாட்டுக்கும் பாராளுமன்றத்துக்கும் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,பயண வழிகாட்டி

சர்வதேச நாணய நிதியத்துடனான 48 மாத விரிவாக்கப்பட்ட கடன் வசதி ஒப்பந்தம் 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் முடிவுக்கு வருவதால், 2028 முதல் இருதரப்பு மற்றும் வர்த்தகக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இவ்வொப்பந்தத்தின் தரவுகளின்படி, 2027ஆம் ஆண்டில் நாட்டுக்கு சுமார் 3,911.9 மில்லியன் டொலர் வெளிநாட்டு வளப் பற்றாக்குறை ஏற்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிதியுதவிகள் மற்றும் கடன் செலுத்தப்படாததால் நாட்டில் தங்கும் நிதி ஆகியவற்றைக் கழித்த பின்னரும், சுமார் 900 மில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும்.

இப்பற்றாக்குறையை ஈடுசெய்ய ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாயினும், நாட்டின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 13 பில்லியன் டொலர்களாக உயர வேண்டும். ஆனால், தற்போது கையிருப்பு 7 பில்லியன் டொலர்களுக்கு அருகிலேயே உள்ளதால், கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

வெளிநாட்டு நிதிப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படாவிட்டால், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டும். அத்தோடு வட்டி விகிதங்கள் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவிற்கு உயரும் அபாயம் உள்ளது.

எனவே, அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின் பிரகாரம் பொது நிதி குறித்த பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உள்ளதால், இப்பிரச்சினை குறித்து தேசிய மட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும். 
சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றிற்குச் செல்வதுடன், 2024 ஆம் ஆண்டின் பொருளாதார மாற்றச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்தி கட்சி பேதமின்றிப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதே இதற்குரிய ஒரே தீர்வாகும் என்றார்.