கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டுத் துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து ஷாட்கன் ரக துப்பாக்கியுடன் பங்குடாவெளியைச் சேர்ந்த விவசாயி ஒருவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வேப்பவெட்டுவான் வயல் பகுதியில் நிலக்கடலை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் பகுதியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றை மீட்டதுடன் பங்குடாவெளி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய விவசாயியை கைது செய்தனர்.
அதனையடுத்து, கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கரடியனாறு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கரடியனாறு பகுதியில் சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space