ஹபராதுவை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) ரயில் மோதி பேருந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கல மார்ட்டின் விக்கிரமசிங்க அருங்காட்சியகத்திற்கு அருகில் அமைந்துள்ள ரயில் கடவையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 06 பேர் உடனடி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹபராதுவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.