மன்னார் விடத்தல்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (24) சனிக்கிழமை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
பள்ளமடு சந்தியில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், பிரதேச சபை உறுப்பினர் என பலரும் இந்த கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கண்காணிப்பு விஜயத்தின் போது வைத்திய சாலையின் குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதோடு வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்று அமைச்சரினால் நாட்டி வைக்கப்பட்டது.





