விதையனைத்தும் விருட்சமே இளைஞரணி அமைப்பு வலிகாமம் வடக்குப் பிரதேச சபையுடன் இணைந்து நடாத்திய மரநடுகைச் செயற்திட்ட நிகழ்வு தீபாவளித் திருநாளான நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (08.11.2026) மாலை-03 மணி முதல் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்கரைப் பகுதி, சிறுவர் பூங்காப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், விதையனைத்தும் விருட்சமே இளைஞரணி அமைப்பின் செயற்பாட்டாளர்கள், வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், வலிகாமம் வடக்குப் பிரதேசசபை ஊழியர்கள், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 25 இற்கும் மேற்பட்ட பயன்தரு மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.