காட்டுயானை தாக்கியதில் ஹங்கேரிய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!
Ad Space
Ad Space
சிகிரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிகிரியா - பிதுரங்கல வீதியில் காட்டுயானை தாக்கியதில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (16) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
யானை தாக்குதலுக்குள்ளான நபர், படுகாயமடைந்து கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 68 வயதான ஹங்கேரிய பிரஜை என தெரியவந்துள்ளது.
சிகிரியா - பிதுரங்கல வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, உயிரிழந்தவரையும் அவரது மனைவியையும் காட்டு யானை தாக்கியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space