டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகளையும் வழங்க திட்டம்
Ad Space
Ad Space
அநுராதபுரம் - மஹவிலச்சிய வீதியில் லோலுகஸ்வெவ பகுதியில் சர்வதேச மட்டத்திலான அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய விளையாட்டு மைதான தொகுதியினை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
சுமார் 250 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பு இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகளை இவ்வருடத்திற்குள்ளேயே மிக விரைவாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வீட்டுத்திட்டம்: விளையாட்டுத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பின் ஒரு பகுதியில், அண்மையில் நிலவிய டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்த மக்களுக்கான விசேட வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space