வவுனியாவில் புதன்கிழமை (18) காட்டுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த முதியவர் ஒருவர் இன்று சனிக்கிழமை (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா, கொந்தக்காரன்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய முதியவர் ஒருவரே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த முதியவர் கடந்த புதன்கிழமை முதல் கொந்தக்காரன்குளம் காட்டுப் பகுதிக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பாது காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து பொலிஸார், இராணுவத்தினர், கிராம சேவையாளர் மற்றும் கிராம மக்கள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.

குறித்த, தேடுதல் நடவடிக்கையின் போது விளக்குவைத்தகுளம் மற்றும் கொந்தக்காரன்குளம் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதியில் இருந்து அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.