காரைநகர்ப் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராகத் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் 2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த்தேசியக் கட்சியின் உறுப்பினர் திருமதி.மகேஸ்வரன் கிளியோபெட்ரா இன்று வெள்ளிக்கிழமை (06.11.2026) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று காரைநகர்ப் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் புதிய உபதவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது. புதிய உப தவிசாளருக்கான தெரிவின் போது பிரதேச சபை உறுப்பினர் திருமதி.மகேஸ்வரன் கிளியோபற்றாவின் பெயர் முன்மொழியப்பட்டது. வேறு முன்மொழிவுகள் எதுவும் இல்லாமையால் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திருமதி.கிளியோபெட்ராவைக் காரைநகர்ப் பிரதேச சபையின் புதிய உபதவிசாளராகப் பிரகடனம் செய்தார்.