இந்திய அமைதிப்படை நடாத்திய ஈழத் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள் வரிசையில் முதல் சம்பவமாகப் பதிவாகிய கொக்குவில் கிழக்கு பிரம்படி கோரப் படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (12.10.2026) காலை-08 மணி முதல் கொக்குவில் ஆடியபாதம் வீதியிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான நினைவுத் தூபியடியில் கொக்குவில் பிரம்படிப் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.


நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர்மாலைகள் அணிவித்து தொடர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.
