கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ஒரு கிலோவிற்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட நான்கு ஜமைக்கா நாட்டவர்கள் நேற்று (12) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலும், வர்த்தகக் கட்டடத் தொகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு கிலோ 49 கிராம் கொக்கைன் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 23 மற்றும் 48 வயதுடையவர்கள் எனவும், பெண் சந்தேகநபர்கள் 43 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.