யால தேசிய பூங்காவின் முதலாம் மற்றும் இரண்டாம் வலயங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

நாட்டில் நிலவிய கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பூங்காவிலுள்ள வீதிக் கட்டமைப்புகளைப் புனரமைக்கவும் கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் குறித்த இரு வலயங்களும் மூடப்பட்டிருந்தன.

மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக தேசிய வனம் மீண்டும் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம் நிலங்களை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.