கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீட்டாளர்களிடம் சட்டவிரோதமாக பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் சீனப் பிரஜை ஒருவரை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சீனாவில் உள்ள குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.