புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கொண்டு செல்ல முயன்ற எட்டு ஆடுகளுடன் டிங்கி படகொன்றையும், அதில் பயணித்த இரண்டு சந்தேகநபர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை இன்று (09) திங்கட்கிமை வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது இடம்பெற்றுள்ளது.
தேடுதலில், உச்சிமுனை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்று கடற்படையினரால் அவதானிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட எட்டு ஆடுகளும், படகில் இருந்த இரண்டு சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், மீட்கப்பட்ட ஆடுகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


