மினுவாங்கொடை பகுதியில், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படை மினுவாங்கொட முகாமின் அதிகாரிகளால், நேற்று புதன்கிழமை (18) இரவு இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரிடமிருந்து 515 லீற்றர் கோடா மற்றும் 127.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.