ஹம்பேகமுவவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
Ad Space
Ad Space
ஹம்பேகமுவ - மயிலவளை பகுதியில், கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (18) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹம்பேகமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 27 கிலோகிராம் 800 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space