அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனப்பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அக்மீமன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 100 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் காலி பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space