பீடி இலைகள் கைப்பற்றல்
Ad Space
Ad Space
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகந்தவில கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே, அவை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 250 கிலோகிராம் 900 கிராம் எடையுள்ள 06 பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பீடி இலைத் தொகுதி யாரால் கொண்டு வரப்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சிலாபம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space