சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
Ad Space
Ad Space
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் நேற்று வியாழக்கிழமை (09) சான்றுரைப்படுத்தினார்.
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (அறவீடு) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் 07ஆம் திகதி இடம்பெற்றதுடன், இரண்டாவது மதிப்பீடு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக 2022ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டம் திருத்தப்படுவதுடன், இந்த வரி விதிப்பிற்கான பதிவிற்குத் தேவைப்படும் விற்பனைவரவு வரம்பைக் குறைப்பதும், மோட்டார் வாகனங்கள் தொடர்பான சில விலக்களிப்புக்களை வழங்குவதும் இதன் சட்டப்பயனாகும்.
இந்தச் சட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பு உதவுதொகைக்கான பதவின் மொத்த விற்பனை வரம்பு ஆண்டொன்றுக்கு அறுபது மில்லியன் ரூபாவிலிருந்து முப்பது மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்படுகின்றது. திருத்தப்பட்ட வரம்பிற்கு இணங்க, புதிய பதிவுத் தேவைகளும் பதிவை இரத்து செய்வது தொடர்பான விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மோட்டார் வாகனங்கள் தொடர்பான விலக்களிப்புக்கள் பற்றிய ஏற்பாடுகளும் திருத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகின்றது.
Ad Space
Ad Space