நல்லூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் "சமுர்த்தி அபிமானி" கண்காட்சியும் விற்பனை சந்தையும்
vidiyel 10 சித்திரை 2026 · 14:44 6 views
Ad Space
Ad Space
நல்லூர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு நடாத்தும் "சமுர்த்தி அபிமானி" கண்காட்சியும் விற்பனை சந்தையும் இன்றைய தினம் (10) நல்லூர் பிரதேச செயலக வளாகத்தில் நடத்தப்பட்டது.
இதன்போது உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவே இந்த சந்தையானது இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நல்லூர் பிரேச செயலர் யசோதா உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பொ.ஸ்ரீவர்ணன் கலந்துகொண்டார்.
மேலும், பதவி நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் கொள்வனவாளர்கள் என பலரும் வருகை தந்தனர்.