சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் உள்ள தாயிஃப்-ரானியா சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு தமிழ்நாட்டினை சேர்ந்த தாதியர்கள் உட்பட ஐவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சவூதி ரானியாவிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தில உயிரிழந்தவர்களில் நால்வர் சவூதியில் தாதியர்களாக பணிபுரிந்து வந்த நிலையில் விடுமுறை நாளில் பொருட்கள் வாங்கவும் மற்ற நடவடிக்கைகளுக்காகவும் காரில் பிரயாணம் செய்கையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் கோட்டயம் அயார்க்குன்னத்தைச் சேர்ந்த ஜெய்சிமோல் மேத்யூ (46) மற்றும் கோட்டயம் குருமுல்லூர் அனாச்செரிஞ்சாக்குன்னலைச் சேர்ந்த ஜோபினா ஜான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டினை சேர்ந்த விஜயலட்சுமி ஜெகதீஷ் (37) மற்றும்ஹெப்சிபா தேவமணி (33) ஆகியோராவர். ஐந்தாவது பலியானவர் காரை ஓட்டிச் சென்ற சாரதி சவூதி நாட்டை சேர்ந்தவரெனவும் அறியப்பட்டுள்ளது
உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்போது சவுதியில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உடல்களை தாயகம் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக சர்வதே செய்திகள் தெரிவிக்கின்றன.