2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள அறிக்கையில், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk பகுதிக்குச் சென்று, பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இப்பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் இருப்பின், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் '1911' என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும், 0112-784208, 0112-784537 மற்றும் 0112-785922 ஆகிய இலக்கங்களுக்கும் தொடர்புகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, இந்த ஆண்டின் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாதாரண தர மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space