இஸ்லாம் மதத்தை அவமதித்தமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரரால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்தே நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.