மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பால ஊழலை மறைக்க திமுக அரசு என்ன தான் ஏமாற்று வேலைகளை செய்தாலும் ஊழலுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் எல் வடிவ மேம்பாலம் தரமற்றும், பலவீனமாகவும், அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கட்டப்பட்டிருப்பதாக தொடர்ந்து நான் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், இப்போது மேம்பாலத்தின் மீது அவசர, அவசரமாக தார்ச்சாலை அமைத்திருக்கிறது. உலகிலேயே புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை அமைத்த ஒரே கம்பெனி கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டைச் சீரழித்த திமுக கம்பெனி தான். இத்தகைய தார்பூச்சு வேலைகளின் மூலம் பாலம் கட்டுவதில் நடந்த ஊழலை மூடி மறைக்க முடியாது.
எல் வடிவ மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் வரை அதை போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க வரும் தேவதையாகப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அந்தப் பாலம் திறக்கப்பட்ட அடுத்த நிமிடத்திலிருந்து அதை உயிரைப் பறிக்க வந்த எமனாகப் பார்க்கத் தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு மத்திய கைலாஷ் பாலத்தை தரமற்றதாக திமுக அரசு கட்டியிருந்தது. அனைத்திலும் ஊழல் செய்து கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் அடங்காத பேராசை தான் இதற்குக் காரணம் ஆகும்.
‘‘சென்னை மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பால ஊழலை தார் பூசி மறைக்க முடியாது’’ - அன்புமணி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space