'சர்வாதிகாரியாக மாறுவேன்’, 'தலைகுனிய விட மாட்டேன்' என வெற்றுக் கூச்சலிடுவதை நிறுத்தி விட்டு முதல்வர் ஸ்டாலின் செயலில் வீரத்தை காட்ட வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எழுதிக் கொடுக்கும் வசனங்களை பேசுவதில், அரசியல் நாவணிகம் செய்வதில் வல்லவர் என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் வழங்கி சூழ்ச்சி செய்து தேர்தலில் வெற்றி பெற்று நிரூபித்து விட்டார். 'தேவைப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன்' என சவால் விட்டு அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இப்போது, 'தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன்' என வீர வசனம் பேசி வருகிறார். ஆனால், தமிழகத்தில் நாள்தோறும் நடப்பதை பார்க்கும்போது, இவையெல்லாம் வெறும் வாய்ச் சவடால்கள், வெற்றுக் கூச்சல்கள் என்பதை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தான் காவல் துறையையும் கவனித்து வருகிறார். ஆனால், தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியவில்லை அல்லது தெரிந்தும் தெரியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறாரா? என்பதும் தெரியவில்லை.
‘திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் உட்பட யாருக்கும் பாதுகாப்பு இல்லை’ - பாஜக
Ad Space
Ad Space
Ad Space
Ad Space