நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்துச் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்குச் சர்வதேச நீதியை வலியுறுத்துவதற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை (07.11.2026) முற்பகல்-11 மணியளவில் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மதத் தலைவர்கள், அனைத்துச் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.