யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (23.06.2026) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் யூலை மாதம்- 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அகழ்வுக் குழுவினருக்கான ஓய்வுக் காலத்தை முன்னிட்டுச் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இன்று மேலதிக மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் எதுவும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை. எனினும்,ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 19 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இதுவரை நடந்த மூன்று கட்ட அகழ்வுப் பணிகளிலும் மொத்தமாக 412 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 409 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space