சொய்சாபுர பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஹோட்டல் உரிமையாளர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உணவகத்தின் உரிமையாளரும் அங்கு உணவருந்திச் கொண்டிருந்த பெண்ணொருவரும் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மொரட்டுவ, சொய்சாபுர பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவராவார்.
இந்தக் கொலைக்கு T-56 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும், தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகக் கல்கிசைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.