“ஜனநாயக கட்சியினர் என்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தால், அது அவர்களின் கட்சியை அழித்துவிடும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க இடைக்கால தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்புக்கு எதிரான ஜனநாயகக் கட்சியிடம் செனட் சபையின் முழு கட்டுப்பாடும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்றுவிடும். இந்த நிலையில் ஜனநாயக கட்சிக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஜனநாயக கட்சியினர் என்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தால், அது அவர்களின் கட்சியை அழித்துவிடும். என்னை பதவி நீக்கம் செய்ய எந்தக் காரணமும் இல்லை. பதவி நீக்க நடவடிக்கை குறித்து நான் சிறிதளவும் கவலைப்படவில்லை.
முன்னதாக ஜனநாயக கட்சியின் திட்டங்களைத் தடுக்க ஜனாதிபதிக்கான வீட்டோ மறுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவேன். அதேவேளை அடுத்த 2 ஆண்டுகள் எதையும் செய்ய விடாமல், எல்லாவற்றுக்கும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு சும்மா அமர்ந்திருக்க நான் விரும்பவில்லை” என்றார்.