இரண்டாம் உலகப்பொருக்குப் பின், முதன்முறையாக ஜேர்மன் மாகாணமொன்றின் சபாநாயகராக தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மன் மாகாணமொன்றில் நடைபெற்ற தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட AfD கட்சி வெற்றி பெற்றதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்தே ஆளுங்கட்சியினர் இன்னமும் விடுபடவில்லை.

இந்நிலையில், ஜேர்மனியில் மீண்டும் சாதனை ஒன்றை படைத்துள்ளது AfD கட்சி!ஆம், ஜேர்மனியின் அரசியல் வரலாற்றில், முதன்முறையாக, ஜேர்மன் மாகாண நாடாளுமன்றத்துக்கு, தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Saxony-Anhalt மாகாணத் தேர்தலில் AfD கட்சி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அம்மாகாண நாடாளுமன்றத்தின் சபாநாயகராக, தீவிர வலதுசாரிக் கொள்கைகள் கொண்ட கட்சி என ஜேர்மன் உளவுத்துறையால் முத்திரை குத்தப்பட்ட AfD கட்சியைச் சேர்ந்த தோபியாஸ் (Tobias Rausch) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஜேர்மன் மாகாணமொன்றின் சபாநாயகராக தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறை என்பதே, AfD கட்சி படைத்துள்ள புதிய சாதனையாகும்.